திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2019 (16:20 IST)

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மாஸ் அப்டேட் கொடுத்த "பிகில்" தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'பிகில்' படத்திற்காக இணைந்துள்ளார். 


 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார். வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின் கடைசிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் விஜய் ரசிகர்கள் அடிக்கடி படத்தின் அப்டேட்டை கேட்டு வந்த நிலையில் தற்போது மாஸான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர். 
 
அதாவது " பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு உரிமையை மகேஷ் கோனேரு மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பெற்றுள்ளதாகவும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிகில் திரைப்படம் சுமார் 400 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளார்.