தொடர்புடைய செய்திகள்
- கூலி தொழிலாளிகளுக்காக நடமாடும் அம்மா உணவகம்! – முதல்வர் தொடங்கி வைத்தார்
- பேரறிவாளன் விடுதலை குறித்து கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்! – பட ப்ரொமோஷன் உத்தியா?
- தடை விதிப்பாங்களோ? பதட்டத்தில் வியாபாரிகள்! – முடங்கிய பட்டாசு விற்பனை!
- தமிழகத்தில் மூன்றாவது கூட்டணிக்கு சான்ஸே இல்ல! – எல்.முருகன் சூசகம்!
- அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்! – கனமழை வாய்ப்பில் தமிழகம்!
எங்களை சங்கின்னு சொன்னா திகார்தான்..! – திமுகவுக்கு ராஜேந்திர பாலாஜி வார்னிங்!
சமீபத்தில் விருதுநகரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுகவை பாஜகவோடு ஒப்பிட்டு பேசிய மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் எதிர்வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் திமுக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசு பாஜகவை போல மத பாகுபாடுகள் பேணுவதாகவும், அதற்கு ஆதரவு அளிப்பதாகவும் பேசியதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “கடவுள் பக்தியில் அதிமுகவும், பாஜகவும் ஒன்றுதான். நாங்கள் சங்கி அல்ல, சங்கி என்று சொல்பவர்களுக்கு திகார் ஜெயில் தயாராக உள்ளது” என்று பேசியுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இவ்வாறான வாக்குவாதம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
