பேரறிவாளன் விடுதலை குறித்து கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்! – பட ப்ரொமோஷன் உத்தியா?

Karthick Suburaj
Prasanth Karthick| Last Modified புதன், 4 நவம்பர் 2020 (11:09 IST)
பேரறிவாளன் விடுதலை குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட போன்ற படங்கள் மூலமாக பிரபலமான இயக்குனரானவர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவாகியுள்ள “ஜகமே தந்திரம்” படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

சமீப காலமாக ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு ஆளுனர் ஒப்புதல் வழங்க வேண்டுமெனெ அரசியல் கட்சிகள் பல வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கார்த்திக் சுப்புராஜ் “எம்டிஎம்ஏ அறிக்கைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற உச்சநீதிமன்றத்தில் விளக்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசு பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுனருக்கு அழுத்தம் தர வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜின் இந்த ட்வீட்டிற்கு தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் அதேசமயம் கார்த்திக் சுப்புராஜ் தனது திரைப்படத்தின் ப்ரொமோஷனுக்காக இதுபோன்ற அரசியல் தொடர்பான பதிவுகளை இடுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :