தீபாவளிக்கு பட்டாசு விற்க தடை விதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் பலர் பட்டாசு வாங்காமல் இருப்பதால் சிவகாசியில் பட்டாசு விற்பனை குறைந்துள்ளது. கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் தீபாவளி திருநாள் வியாபாரிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் தீபாவளிக்கு பட்டாசு வெடித்து கொண்டாடும் நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சிவகாசியில் இருந்து பட்டாசுகள் அனுப்பப்படுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் கொரோனா காரணமாக ராஜஸ்தானில் பட்டாசு வெடிக்க, விற்பனை...