1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajendra Balaji says about PM candidate

ஒரே ஒரு எம்பி வைத்திருந்தவர் பிரதமர் ஆகும்போது ஈபிஎஸ் பிரதமர் ஆக முடியாதா? ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி
ஒரே ஒரு எம்பி வைத்திருந்த ஐகே குஜ்ரால் பிரதமராக இருந்தபோது இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமராக முடியாதா என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

 எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் ஆவார் என்று நான் சொன்ன போது ஒரு சிலர் கேலியாக சிரிக்கின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

ஒரே ஒரு எம்பி மட்டுமே வைத்திருந்த ஐகே குஜ்ரால் பிரதமராக இருந்தார், ஒரு சில எம்பிக்கள் மட்டுமே வைத்திருந்த தேவகெளடா மற்றும் சந்திரசேகர் பிரதமாக இருந்தனர்

அப்படி இருக்கும்போது எடப்பாடி பழனிச்சாமி ஏன் பிரதமராக கூடாது. ஒன்று எடப்பாடி பழனிச்சாமி கைகாட்டும் நபர்தான் பிரதமர் அல்லது அவரே பிரதமர் என்று ராஜேந்திர பாலாஜி பேசினார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வை ரத்து.. மாணவர்களிடம் கட்டாய கையெழுத்தா? நீதிமன்றத்தில் முறையீடு..!