வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 25 அக்டோபர் 2023 (20:30 IST)

அயோத்தி ராமர் கோயில் திறப்பு தேதி அறிவிப்பு

Ram Temple
அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த கோயில் திறப்பு தேதி மற்றும் கும்பாபிஷேகம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே  ரூ.1000 கோடிக்கு மேல் நாடுமுழுவதிலும் இருந்து நன்கொடை குவிந்ததாகத் தகவல் வெளியான நிலையில், ராம ஜென்மபூமியின் பாதுகாப்பு மற்றும் ராமர் கோவில் புனிதத்தை கருத்தில் கொண்டு கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்தக் கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து எப்போது கோயில் திறக்கப்படும் என்ற ஆர்வம் பக்தர்களிடையே எழுந்த நிலையில், அடுத்தாண்டு ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரமாண்டமாக உருவாகியுள்ள ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22 ஆம் தேதி திறந்துவைக்க உள்ளார் எனவும், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.