ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 25 அக்டோபர் 2023 (13:29 IST)

எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா? சிரித்து கொண்டே அண்ணாமலை கூறிய பதில்..!

எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வேட்பாளராக வாய்ப்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  பிரதமர் பதவி என்பது எங்கே போய்விட்டது என்பதை நினைத்து சிரிக்கிறேன் என்று கூறினார். 
 
பிரதமர் பதவிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது, அந்த பதவியில் உட்கார ஒரு தகுதி இருக்கிறது என்று கூறிய அண்ணாமலை இந்த கேள்விக்கு நான் பதில் அளித்தால் தவறாகிவிடும், எனவே இந்த கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று கூறினார். 
 
உலகின் 70 நாடுகளில் இணைந்து எடுத்த கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி தான் முதலிடத்தில் உள்ளார் என்றும், அந்த அளவுக்கு அந்த பதவியை பிரதமர் மோடி அழகு படுத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார்.
 
 எங்கள் கட்சியைச் சார்ந்த பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறை மட்டுமல்ல நான்காவது முறையும் அவர்தான் பிரதமர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து அருள்
 
Edited by Mahendran