வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (10:56 IST)

கிருஷ்ணகிரியில் பதுங்கியிருக்கின்றாரா ராஜேந்திரபாலாஜி? தனிப்படைகள் விரைவு!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரியில் பதுங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து கிருஷ்ணகிரிக்கு தனிப்படைகள் விரைந்துள்ளதாக் கூறப்படுகிறது 
 
வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்காததை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரபாலாஜி கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என போலீசாருக்கு தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு தனிப்படைகள் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.