புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (13:34 IST)

ராஜேந்திர பாலாஜி கடல் வழியாக தப்பிக்க வாய்ப்பு?

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடல் வழியாக தப்பி செல்வதை தடுக்க கண்காணிப்பு தீவிரம்.

 
அதிமுக ஆட்சியின் போது பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்த விவகாரத்தில் தேடப்பட்டு வருகிறார். அவரை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு காத்திருப்பில் உள்ளது.
 
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவிலும் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி வெளிமாநிலத்திற்கோ, வெளி நாட்டிற்கோ தப்பி செல்லாமல் இருப்பதை தடுக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 
 
இந்நிலையில் தற்போது கடல் வழியாக தப்பி செல்ல வாய்ப்பு உள்ளதால் கிழக்கு கடற்கரை பகுதிகளான தூத்துக்குடி கடற்கரையில் இருந்து வேதாரண்யம் கடற்கரை வரையிலான கடலோர பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுசுகோடி வழியாக எளிதில் இலங்கையை அடையாளம் என்பதால் அந்த பகுதிகளிலும் கண்காணிப்பை அதிகரிக்க தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.