1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 24 டிசம்பர் 2021 (10:51 IST)

எகிறும் ராஜேந்திர பாலாஜியின் க்ரைம் ரேட்! – மேலும் ஒரு புகார்!

ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு புகார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாகியுள்ளார். அவரை 6 தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றன.

இந்நிலையில் தற்போது சாத்தூரை சேர்ந்த ஒருவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சத்துணவில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி மீது புகார்கள் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.