1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (11:20 IST)

ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 2 புகார்கள்: வழக்குப்பதிவு செய்யப்படுமா?

ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 2 புகார்கள்: வழக்குப்பதிவு செய்யப்படுமா?
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கனவே வேலை வாங்கி தருவதாக 3 கோடி மோசடி செய்ததாக வழக்கு இருக்கும் நிலையில் தற்போது மேலும் புகார்கள் குவிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
மதுரை வில்லாபுரம் மீனாட்சி சுந்தரம் என்பவர் மாநகராட்சி அலுவலக உதவியாளர் வேலை பெற ரூபாய் 7 லட்சம் ராஜேந்திரபாலாஜி இடம் கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்
 
அதேபோல் சிவகாசி சித்துராஜபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் தனது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக 17 ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக புகார் அளித்துள்ளார் 
 
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் புகார்கள் குவிந்து வருவதால் அவர் மீது மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.