1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain targeted 20 districts including Chennai in the evening!

மாலை நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை!

Rain

இன்று மாலை வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், பல பகுதிகளில் வெப்பமும் வாட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்படு, காஞ்சிபுரம், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களிலும், திருநெல்வேலி, கோவையின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்யக்கூடும்.

 

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

About Writer
Prasanth K
அடுத்த கட்டுரையில்
முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!