1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain is going to cool down 11 districts today! Which districts?

இன்று 11 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

Rain

தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியுள்ள நிலையில் அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னதாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டு தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் தமிழகத்தில் மழை வாய்ப்பு அதிகரித்தது.

 

இந்நிலையில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Edit by Prasanth.K

About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை எப்படியாவது மீட்டுவிடுங்கள்: ராணுவ தலைவருக்கு ஆன்மீக ஆசான் கோரிக்கை..!