1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain in ten districts within few hours

10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்குள் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

Rain
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே இன்று காலை சென்னை உள்பட 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற உயநிதி