செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated: புதன், 23 நவம்பர் 2022 (19:12 IST)

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி

stalin, udhayanidhi
திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும் நடிகருமான  உதயநிதி ஸ்டாலின்  இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சமீபத்தில், திமுகவில், தலைவர், பொதுச்செயலாளர்,  மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், திமுகவில் ஏற்கனவே இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பு வகித்த நிலையில், இம்முறை மீண்டும் அதே பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று முதல்வர்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து உதய நிதி ஸ்டாலின் அவரிடம் வாழ்த்துப் பெற்றார்.

இதுகுறித்து, அவர் பதிவிட்டுள்ளதாவது:

‘’இளைஞரணியை ஏறத்தாழ 40 ஆண்டுகள் வளர்த்தெடுத்து வலுப்படுத்திய கழகத் தலைவர்@mkstalin அவர்களிடம், @dmk_youthwing செயலாளராக கழக பணியாற்ற மீண்டும் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையொட்டி நன்றி தெரிவித்து வாழ்த்துபெற்றேன். திறன்மிகுந்த கழக இளைஞர்களை ஒருங்கிணைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் டிசம்பர் 1 ஆம் தேதி  காலை 10;30 மணிக்கு  திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Sinoj