தொடர்புடைய செய்திகள்
- சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!
- சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன வானிலை மையம் தகவல்.. கோடைக்கு விடுமுறை?
- தடையின்றி குடிநீர்..! 150 கோடி நிதி ஒதுக்கீடு..! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!
- கர்ப்பிணி பெண்கள் கோடை வெயிலில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
- சென்னை மக்களே.. வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.. வானிலை மையத்தின் அதிர்ச்சி தகவல்..
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!
சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்து வருவதை எடுத்து சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்தது என்பதும் இதனால் மதிய நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டது என்பதும் தெரிந்தது.
ஆனால் கடந்த நான்கு நாட்களாக சென்னையில் திடீரென தட்பவெப்ப நிலை மாறி பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதை அடுத்து கோடை காலம், அக்னி நட்சத்திர காலம் என்பதே தெரியாமல் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, வடபழனி, எம்ஆர்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் தேனாம்பேட்டை, அண்ணா சாலை, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளதால் சென்னையின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
