1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain in five districts today at tamil nadu

காலை 10 மணிக்குள் 5 மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Chennai Rain
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது சமூக வலைதளத்தில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று கணித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் சில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
யுகேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: பொதுமக்கள் ரயில் மறியலால் பரபரப்பு..!