தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்..!
- சென்னை மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் திடீர் பள்ளம்.. பேருந்து சிக்கியதால் பரபரப்பு..!
- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.. உயர்ந்ததா? குறைந்ததா?
- இ-சிகரெட் பதுக்கி வைத்து விற்பனை.. சென்னையில் இருவர் கைது..!
- காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை அறிவிப்பு..!
ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் சரிந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!
கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏற்றத்திலும் சமநிலையிலும் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 6,660 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 53,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,115 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,920 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 92.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 92,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
