1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (14:44 IST)

இன்று மாலை 14 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Chennai Rain
இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வேலை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது மழை குறித்த தகவல்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறது.
 
அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 14 மாவட்டங்களில்  மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்யும் என்று தமிழக மட்டுமின்றி புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran