1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rain in 23 districts within 3 hours

23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்

rain
அடுத்த மூன்று மணி நேரத்தில் இருபத்திமூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதும் வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இந்த மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சி உள்பட 23 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல்? முழு விபரத்தை அறிவிக்க உத்தரவு