வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:08 IST)

எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல்? முழு விபரத்தை அறிவிக்க உத்தரவு

டாஸ்மாக், கொள்முதல், மதுபானம்,
டாஸ்மாக் கடைகளுக்கு எந்தெந்த நிறுவனங்களில் இருந்து எவ்வளவு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்பது குறித்த முழு விவரங்களையும் தெரிவிக்குமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அதிரடியாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
டாஸ்மாக்குக்கு எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு விலைக்கு மது பானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்பதை ஜனவரி 6ஆம் தேதிக்குள் சீல் வைத்த கவரில் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
ஏற்கனவே இந்த விபரங்களை குறிப்பிட்ட தேதிக்குள் டாஸ்மாக் நிர்வாகம் சமர்ப்பிக்காததால் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட் அபராத தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இதனையடுத்து ஜனவரி 6ஆம் தேதிக்குள் டாஸ்மாக் நிர்வாகம் எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு விலைக்கு மது பானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran