செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (14:14 IST)

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை

rain
சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் மீண்டும் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை வாய்ப்பு என அறிவித்துள்ளது
 
Edited by Mahendran