செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (11:24 IST)

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி: தேதியை அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

anbil
சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி: தேதியை அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி விரைவில் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் தேதியை அறிவித்துள்ளார். 
 
சென்னையில் முதல் முதலாக சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் ஜனவரி 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற இருப்பதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார் 
 
இந்த கண்காட்சியில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பில் இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
இந்த புத்தக கண்காட்சியை பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களுக்கும் இந்த புத்தக கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran