செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 1 ஜனவரி 2020 (09:15 IST)

நள்ளிரவில் அமலுக்கு வந்த ரயில் கட்டண உயர்வு..

புத்தாண்டின் நள்ளிரவில் ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

புத்தாண்டு முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்திடுந்த நிலையில் நள்ளிரவு அமலுக்கு வந்தது. அதன் படி சாதாரண ரயில்களில் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் விரைவு ரயிலில் சாதாரண வகுப்புகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், குளிர்சாதன வகுப்புகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 4 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதிவிரைவு ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும், முன்னமே முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கும், கட்டண உயர்வு பொருந்தாது எனவும், புறநகர் மற்றும் சீசன் டிக்கெட்டுகளுக்கும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.