திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (19:46 IST)

”ஏர் இந்தியா தனியார் மயமாக்க தீவிரம்”.. மத்திய அமைச்சர் உறுதி

ஏர் இந்தியா நிறுவனம் மயமாக்க தீவிரமாக முயற்சி நடைபெற்று வருவதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் ரூ.60 ஆயிரம் கோடி கடன் சுமையில் இருக்கிறது. எனவே ஏர் இந்தியாவின் பங்குகள் முழுவதும் தனியார்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி,
ஏர் இந்தியாவை கூடிய விரைவில் தனியார்மயமாக்க தீவிர முயற்சி செய்துகொண்டிருக்கிறோம், எங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், தனியார் மயமாக்கப்பட வேண்டும் என தான் முன்பே கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.