செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (19:32 IST)

நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் உயர்கிறது... ரயில்வே அறிவிப்பு !

பேருந்தைக் காட்டிலும் ரயிலில் பாதி கட்டணம் தான் என்பதால் மக்கள் பலர் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். இந்நிலையி இன்று நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் உயர்த்தவுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ரயில் கட்டணத்தை உயர்த்தி 15 ஆண்டுகள் ஆனதால் பராமரிப்பு செலவுகள், இதர செலவுகள் என ரயில்வே நிர்வாகத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்திருந்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் ரயில்வே கட்டணம் உயர்கிறது என இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது

மேலும், புறநகர் ரயில்களில் கட்டணம் உயரவில்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.