1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Raid in savukku sankar house and sealed

சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேர சோதனை நிறைவு! கஞ்சா சிகரெட் பறிமுதல்! வீட்டுக்கு சீல்..!

Savuku Sankar
சவுக்கு சங்கர் வீட்டில் கடந்த சில மணி நேரங்களாக சோதனை செய்யப்பட்ட நிலையில் அவருடைய வீட்டில் இருந்து கஞ்சா சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து பாஸ்புக் உள்பட பல முக்கிய ஆவணங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கஞ்சா வழக்கில் போலீசார் அவருடைய வீட்டை சோதனை செய்தனர். இந்த சோதனை கிட்டத்தட்ட 10 மணி நேரம் நடந்ததாகவும் இந்த சோதனைக்கு பிறகு குடும்ப அடையாள அட்டை, மொபைல் போன், ரொக்க பணம் 2 லட்சம், கம்ப்யூட்டர், கஞ்சாவுடன் கூடிய சிகரெட் வெப் கேமரா, கார், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது

பின்னர் போலீசாரின் சோதனையில் எடுத்த பொருட்கள் சரிவர கணக்கு பார்த்து மதுரவாயல் தாசில்தார் சந்திரசேகர் என்பவர் முன்னிலையில் சவுக்கு சங்கர் வீட்டுக்கு காவல்துறை அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது வீட்டில் கஞ்சா சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் வீடு சீல் வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஒரே நாளில் 3 முறை விலை உயர்ந்தும் அட்சய திருதியை நாளில் ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை!