1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (10:30 IST)

புதுச்சேரியில் போட்டியிடுகிறாரா ராகுல் காந்தி.. காங்கிரஸின் பலே திட்டம்..!

rahul gandhi
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் போட்டியிடவில்லை என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கேரளாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ராகுல் காந்தி புதுச்சேரியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி தான் பிரதமராக வேண்டும் என்று கடந்த தேர்தலின் போது அறிவித்த ஒரே தலைவர் ஸ்டாலின் என்ற நிலையில் இந்த முறை அவர் அறிவிக்காமல் இருப்பது இந்தியா கூட்டணியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகள் கொடுத்தால் கூட ஏற்றுக் கொள்ளப்படும் என சோனியா தரப்பில் இருந்து கூறியுள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி புதுச்சேரி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டால் முதல்வர் ஸ்டாலின் அங்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் அதை திமுக தரப்பு ஏற்றுக் கொண்டால் ராகுல் காந்தி புதுச்சேரியில் போட்டியிடுவது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

Edited by Mahendran