ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (06:58 IST)

நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.. இறுதிக்கட்டத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை..!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற நிலையில் அங்கு அவர் பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்திற்கு தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்தார். அது மட்டுமின்றி ஸ்பெயின் நாட்டின் தொழில் அதிபர்களுடன் அவர் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின்  தமிழகத்திற்கு தொழில் தொடங்க தொழிலதிபர்களை அழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் திமுக பிரமுகர்கள் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சு வார்த்தையை முடித்துள்ளனர்.
 
முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் கூட்டணி கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை ஸ்பெயின் நாட்டின் பயணத்தை முடித்துவிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைவர் சென்னை திருப்புகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நாளை காலை எட்டு முப்பது மணிக்கு அவர் சென்னை வர இருப்பதாகவும் அதனை அடுத்து நாளையே அவர் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தை செய்ய தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva