1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2024 (07:09 IST)

மம்தா இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறார், எங்களை பிரிக்க முடியாது: ராகுல் காந்தி

மம்தா பானர்ஜி எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார் என்றும் இந்தியா கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்றும் ராகுல் காந்தி பீகாரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்

கடந்த சில மக்களுக்கு முன்னால் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்தபோது மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இடையே இருந்த உறவு முறிந்து விட்டதாக கூறப்படும் நிலையில் பீகாரில் நேற்று ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறார் என்றும் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே சில பிரச்சனைகள் இருந்தாலும் எங்களை பிரிக்க முடியாது என்றும் கூறினார்.

மேலும் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்து அவர்களை வீழ்த்துவோம் என்றும் இந்தியா கூட்டணியில் பிளவு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடக்கும் போது சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு தான் என்றும் அவர் கூறினார்.

Edited by Siva