1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Radhakrishnan says TN corona case little slow after lockdown

ஞாயிறு ஊரடங்கால் கைமேல் பலன்; அப்படியே தொடரணும்! – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!

Tamilnadu
தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் பலன் கிடைத்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிறு முழு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அம்மா உணவகம், மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் ஞாயிறு ஊரடங்கு குறித்து பேசியுள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “ஞாயிறு ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்றே குறைந்திருப்பதாய் உணர முடிகிறது. தொடர்ந்து மக்கள் மாஸ்க் அணிவதுடன், கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஆக்ஸிஜனை எங்ககிட்ட தாங்க.. நாங்க பிரிச்சு தறோம்! – ஸ்டெர்லைட் ஆக்ஸிஜனை கேட்கும் மத்திய அரசு!