1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (11:07 IST)

பிரதமரா இருந்தாலும் ஒரே சட்டம்.. ஒரே அபராதம்! – மாஸ்க் போடாத பிரதமருக்கு அபராதம்!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் மாஸ்க் அணியாமல் சென்ற தாய்லாந்து பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில் பல்வேறு நாடுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன. அதை மீறியும் மாஸ்க் அணியாமல் திரிபவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை உள்ளிட்டவை விதிக்கப்படுகின்றன. தாய்லாந்திலும் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என்ற கட்டுப்பாடு உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தலைநகர் பாங்காக்கில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா மாஸ்க் அணியாமல் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாஸ்க் அணியாமல் வந்த பிரதமருக்கு 600 பக்த் (இந்திய மதிப்பில் 14,720 ரூபாய்” அபராதத்தை அம்மாகாண கவர்னர் அஸ்வின் குவான் முவாங் விதித்துள்ளார். பிரதமரே ஆனாலும் குற்றம் குற்றமே என அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.