30 நாட்களில் காதலிப்பது எப்படி? பிகில் நடிகையின் கவனத்தை ஈர்க்கும் படம்!
நடிகை அம்ரிதா நடித்துள்ள 30 நாட்களில் காதலிப்பது எப்படி என்ற படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
பல படங்களில் நடித்திருந்தாலும் பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்த பின்னர் பிரபலமானார் அம்ரிதா. அதன் பின்னர் பிகில் அம்ரிதா என்று அழைக்கப்படும் அவருக்கு லிப்ட் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இப்போது தெலுங்கில் 30 நாட்களில் காதலிப்பது எப்படி என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் நாயகனோடு முத்தக் காட்சிகளில் கவர்ச்சியாக நடித்துள்ள அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.