தொடர்புடைய செய்திகள்
- தமிழகம், புதுச்சேரியில் ராணுவ தளவாடக் கண்காட்சி! – சுய உற்பத்தியை நோக்கி இந்தியா!
- புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை: சென்னைக்கும் எச்சரிக்கையா?
- டிச. 14 வரை 5 நாட்களுக்கு மழை - வானிலை மையம் கணிப்பு!!
- தடுப்பூசி போடாவிட்டால் வெளியே வர அனுமதியில்லை! – புதுச்சேரி அரசு அதிரடி!
- வரும் 6 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு- பள்ளிக் கல்வித்துறை
புதுச்சேரி கடற்கரையில் மக்கள் புத்தாண்டு கொண்டாட அனுமதி
புதுச்சேரி கடற்கரையில் மக்கள் புத்தாண்டு கொண்டாட விதிமுறைகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் சமீபத்தில் இந்தியாவில் நுழைந்தது என்பதும் படிப்படியாக ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி தற்போது இந்தியா உள்ளிட்ட 90 நாடுகளுக்கு பரவியுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் வாரங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வரவுள்ளதால் இதனை உலக நாடுகள் தவிர்க்கும் படியும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
ஆனால், புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட விதிமுறைகளுடன் அனுமதியளிக்கப்படுகிறது என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கடற்கரையில் கொண்டாட அனுமதி என அவர் தெரிவித்துள்ளார்.
