தடுப்பூசி போடாவிட்டால் வெளியே வர அனுமதியில்லை! – புதுச்சேரி அரசு அதிரடி!
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தற்போது ஒமிக்ரான் பரவல் அபாயமும் உள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களிலும் மக்கள் பலர் தடுப்பூசி போட தயங்கும் நிலையில் தடுப்பூசி செலுத்துவை அதிகரிக்கும் நடவடிக்கையில் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் திரையரங்குகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இந்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.