தொடர்புடைய செய்திகள்
- துணைமுதல்வர் ஒ.பி.எஸ்க்கு 'தங்க தமிழ் மகன்' விருது...அதிமுகவினர் மகிழ்ச்சி
- சுஜித் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கிய அதிமுக..
- வீட்டுல பேட்டி கொடுத்தா ’எம்.ஜி.ஆர் ’ இல்லை : ரஜினியை சீண்டிய முதல்வர் !
- ஸ்டாலினுக்கு அல்வா; ரஜினி, கமலுக்கு..? – எகிறயடிக்கும் எடப்பாடியார்!
- அதிர வைத்த பாஜக டிமாண்ட்; அது எப்படி? விழி பிதுங்கும் அதிமுக!
அதிமுகவில் இணைகிறார் புகழேந்தி..
புகழேந்தி உள்ளிட்ட அமமுக அதிருப்தியாளர்கள் அதிமுகவில் இணைகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசி வந்த செய்திகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. மேலும் கடந்த மாதம் முதல்வர் எடப்பாடியின் வீட்டிற்கே சென்று சந்தித்து பேசினார் புகழேந்தி.
அப்பொழுதே புகழேந்தி அதிமுகவில் இணையப்போகிறாரா? என பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அது நட்பு ரீதியான சந்திப்பு என புகழேந்தி விளக்கம் அளித்தார். இந்நிலையில் தற்போது புகழேந்தி உள்ளிட்ட அமமுகவின் அதிருப்தியாளர்கள் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைகிறார்கள் என தகவல் வெளிவந்துள்ளது.
முன்னதாக அமமுகவில் இருந்த தங்கத் தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தது அனைவரும் அறிந்த செய்தியே. இந்நிலையில் தற்போது புகழேந்தி உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் அதிமுகவில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
