சுஜித் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கிய அதிமுக..

Arun Prasath| Last Modified சனி, 9 நவம்பர் 2019 (19:13 IST)
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் குடும்பத்திற்கு சார்பாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

சமீபத்தில் திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டரை வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான். உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல அரசியல் தலைவர்களும் இரங்கல் செலுத்தினர்.

இந்நிலையில் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் சுஜித்தின்  பெற்றோருக்கு அதிமுக சார்பாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை நேரில் சென்று அமைச்சர்கள் வழங்கினார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :