திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 8 நவம்பர் 2019 (11:49 IST)

அதிர வைத்த பாஜக டிமாண்ட்; அது எப்படி? விழி பிதுங்கும் அதிமுக!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் பாஜக இரண்டு முக்கிய மாநகரங்களின் மேயர் பதவி வேண்டும் என கேட்டுள்ளதாம். 
 
தமிழகத்தில் விட்டுப்போன தொகுதிகளுக்கு எல்லாம் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அடுத்து உள்ளாட்சி தேர்தலை எதிர்நோக்கியுள்ளது தமிழகம். உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளான அதிமுக, திமுக தயாராகி வருகிறது. அதிமுக, திமுக மட்டுமின்றி இக்கட்சிகளின் தோழமை கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்காக தயராகி வருகின்றனர். 
 
அதிலும் குறிப்பாக பாஜக இப்போதே அதிமுகவிடம் முக்கிய இரு பெருநகரங்களின் மேயர் பதவி வேண்டும் என டிமாண்ட் செய்துள்ளதாம். இது குறித்து அதிமுக தலைமை அலோசித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
அந்த இரு பெருநகரங்கள் எதுவென செய்தி வெளியிடப்படாத நிலையில், அதிமுக இந்த விஷயத்தில் சற்று தயக்கம் காட்டுவதாகவும் தெரிகிறது. எதுவானாலும் தலைமையின் முடிவை ஏற்க தயார் என்ற நிலையிலேயே அதிமுக முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளார்களாம்.