ஸ்டாலினுக்கு அல்வா; ரஜினி, கமலுக்கு..? – எகிறயடிக்கும் எடப்பாடியார்!

edapadi
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 8 நவம்பர் 2019 (19:46 IST)
விக்கிரவாண்டியில் நடைபெற்ற நன்றி தெரிவித்தல் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினை நேரடியாகவும், மற்றவர்கலை மறைமுகமாகவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்றது. அதை தொடர்ந்து இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் ”இடைத்தேர்தல் வெற்றிகள் மூலம் தமிழக மக்கள் அதிமுக அரசு அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றிபெறும் என்பதை சூசகமாக நிரூபித்துள்ளார்கள். மேலும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வாயில் அல்வா வைத்துவிட்டனர். ஸ்டாலினுக்கு முதல்வராக கொடுத்து வைக்கவில்லை. நல்ல எண்ணம் இருந்தால் மட்டுமே முதல்வர் பதவி கிடைக்கும்” என பேசியுள்ளார்.

மேலும் ரஜினி தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக பேசியுள்ள நிலையில் பேசிய முதல்வர் “தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் அதிமுக கட்சிதான் ஆட்சியமைக்கும்” என்று சூசகமாக கூறியுள்ளார். இந்த கருத்து கமல் பிறந்த நாள் விழாவில் பேசியது, மற்றும் ரஜினி பேசியது ஆகியவற்றுக்கு எடப்பாடியார் தரும் மறைமுக பதிலடி என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :