வீட்டுல பேட்டி கொடுத்தா ’எம்.ஜி.ஆர் ’ இல்லை : ரஜினியை சீண்டிய முதல்வர் !

rajiikanth
sinojkiyan| Last Updated: வெள்ளி, 8 நவம்பர் 2019 (20:20 IST)
இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பாஜக தரப்பில் இருந்து யாரும் என்னை வந்து அனுகவில்லை.  திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்  எனவும் , தமிழகத்தில் சிறப்பான வெற்றிடம் இருக்கிறது எனவும் பேசியிருந்தார். 
இந்நிலையில் தமிழக முதல்வரும் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது :
 
அடுத்த தேர்தலில் வெற்றி என்று பலர் புறப்பட்டுள்ளார்கள், சிலர் நாங்கள் தான் அடுத்த தேர்தல் வெற்றி பெறுவோம் என்கிறார்கள். சிலர் அரசியலை தொழில் என நினைக்கிறார்கள். 
edapadi
ஆனால், முன்னாள் முதல்வர்களாக எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உழைப்பால் உயர்ந்தவர்கள்.  அரசியலில் நுழைந்ததும் உடனே பதவிக்கு வந்துவிட முடியாது. இரவு பகல் பார்க்காமல் உழைத்தால்தான் மக்களின் நன்மதிப்பை பெற முடியும்.உங்களைப் போல் வீட்டில்   இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர்கள் எம்ஜிஆர் , ஜெயலலிதா அல்ல  என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
முதல்வரின் பேச்சு ரஜினியை சுட்டிக் காட்டி, அவருக்கு பதிலடி கொடுப்பதாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :