தொடர்புடைய செய்திகள்
- துப்பாக்கி குண்டு பாய்ந்த புதுக்கோட்டை சிறுவன் கவலைக்கிடம்!
- புதுக்கோட்டை துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தை மூட உத்தரவு!
- துப்பாக்கிசூடு பயிற்சியில் சிறுவன் மீது பாய்ந்த குண்டு! – புதுக்கோட்டையில் பரபரப்பு!
- கிணற்றில் கிடந்த 750 சவரன் நகைகள்! புதுக்கோட்டை வழக்கில் திருப்பம்!
- ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளிக்கட்டிடங்கள் இடிக்க உத்தரவு… புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!
புதுக்கோட்டையில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் காவலர் பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி உயிரிழப்பு.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் காவலர் பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த 31ஆம் தேதி 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையிலிருந்த குண்டு அகற்றப்பட்டது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த சிறுவன் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது தலையில் துப்பாக்கி குண்டால் காயம்ப்பட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் புகழேந்தி உயிரிழந்தான்.
