1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:48 IST)

துப்பாக்கி குண்டு பாய்ந்த புதுக்கோட்டை சிறுவன் கவலைக்கிடம்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை என்ற பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியானது என்பது தெரிந்ததே. இந்தநிலையில் அந்த சிறுவன் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
புதுக்கோட்டை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி பயிற்சியின் போது சிறுவன் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கி குண்டு பாய்ந்த 11 வயது சிறுவன் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் தஞ்சை மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது