வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 18 டிசம்பர் 2021 (10:53 IST)

ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளிக்கட்டிடங்கள் இடிக்க உத்தரவு… புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!

புதுக்கோட்டையில் ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளிக்கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளிக் கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகம் எங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவர்கள் சரியாக பராமரிக்கப் படாதலேயே கட்டிடம் விழுந்ததாக அந்த பள்ளியின் தாளாளர் மற்றும் ஒப்பந்தக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.