1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Puducherry schools closed till May 31

கொரோனா எதிரொலி: பள்ளிகளுக்கு மீண்டும் மூடுவிழா!!

Puducherry
புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 

 
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனால் மக்கள் பீதி அடைந்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து சில மாநிலங்கள் ஆலோசித்து வருகின்றன. 
 
அந்த வகையில், புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை (மார்ச் 22 முதல் மே 31 வரை) அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் மட்டுமே இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசியா?? ஹர்ஷவர்தன் மறுப்பு!!