தொடர்புடைய செய்திகள்
- அதான் தேமுதிக விலகிடுச்சே…. எங்களுக்குக் கொஞ்சம் சேத்துக் கொடுங்க! அதிமுகவை நெருக்கும் கூட்டணிக் கட்சிகள்!
- அதிமுக விடிய விடிய பேச்சுவார்த்தை: முற்றுப்பெற்ற தொகுதி பிறிவு!!
- டி.டி.வி. தினகரன் இரு கட்சிகளுடன் கூட்டணி...தொகுதிகள் ஒதுக்கீடு
- திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்: முழு விபரம்
- பாஜகவில் இணையவுள்ள ’ஆக்சன் கிங்’ நடிகர்...?.சினிமாத்துறையினர் ஆச்சர்யம் !
புதுச்சேரியில் பாஜகவுக்கு அதிக தொகுதிகள்! – அதிமுகவுக்கு எவ்வளவு?
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் தொகுதி பங்கீடு விவரம் வெளியாகியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் அதிமுக, என்.ஏர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இதுகுறித்து மூன்று கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தற்போது தொகுதி பங்கீடு விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் புதுச்சேரியில் 16 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் போட்டியிடும் என பாஜக மேலிட பொறுப்பாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்று யார் யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து இன்று முடிவாகும் என்று கூறப்படுகிறது.
