1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Puducherry hadn’t corona cases

கொரோனா இல்லாத மாநிலமானது புதுச்சேரி! – மக்கள் நிம்மதி!

Tamilnadu
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மூன்று அலை பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரியில் 3 லட்சத்தை தொட்ட தினசரி பாதிப்புகள் தற்போது 12 ஆயிரமாக குறைந்துள்ளன.

இந்நிலையில் பல மாநிலங்களிலும் கொரோனா வெகுவாக குறைந்துள்ளது. யூனியன் மாநிலமான புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாக புதிய கொரோனா பாதிப்புகள் ஏற்படாமல் இருந்து வந்தது. தற்போது கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு மற்றும் சிகிச்சை இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது. இது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஸ்மித்தை வெளியேற சொன்னோம்... ஆஸ்கர் அகாடமி தரும் விளக்கம்!