வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (10:06 IST)

பீஸ்ட் டிரைலருக்காக செம்ம ஆர்வமாகக் காத்திருக்கும் இயக்குனர்!

இயக்குனர் செல்வராகவன் பீஸ்ட் படத்தின் டிரைலருக்காக காத்திருப்பதாக அறிவித்துள்ளார்.

தளபதி விஜய் நட்த்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 14 புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஏப்ரல் 14 ல்  இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் கேஜிஎப் 2 படமும்  ரிலிஸ் ஆகிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழலாம்.

ஏற்கனவே பீஸ்ட் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. அடுத்த கட்டமாக டீசர் மற்றும் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆந்த ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக நேற்று பீஸ்ட் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இது சம்மந்தமாக சன் பிக்சர்ஸ் பகிர்ந்த அப்டேட்டை ஷேர் செய்துள்ள இயக்குனர் செல்வராகவன் ‘வாவ்… காத்திருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.