1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Puducherry child dead after playing games

புதுச்சேரியில் ஆன்லைன் கேமால் விபரீதம்! – சிறுவன் மயங்கி விழுந்து பலி!

Tamilnadu
புதுச்சேரியில் சிறுவன் ஒருவன் பல மணி நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதால் பலியானதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சிறுவர்கள் கைகளிலும் ஸ்மார்ர்போன் புழக்கம் சகஜமாகிவிட்ட நிலையில் ஆன்லைன் கேம்கள் மீது சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற ஆன்லைன் கேம்களால் பலர் பணத்தை இழந்துவிடும் நிலையில் ஆன்லைன் கேம் மீதான மோகத்தால் உயிர் பலி ஏற்படுவதும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் சிறுவன் ஒருவன் கேம் மோகத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கேம் விளையாடிய சிறுவன் மயங்கி விழுந்ததாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பன்வாரிலால் புரோகித் சட்டப்பேரவை கூட்டத்தில் பேசியது என்ன??