செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (12:11 IST)

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!? சசிக்கலா ஆதரவு போஸ்டர்! – நிர்வாகிகளை நீக்கிய அதிமுக!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகியுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகி வந்துள்ள நிலையில் அவரது விடுதலை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சசிக்கலாவை வரவேற்று அதிமுகவினர் போஸ்டர் ஒட்டுவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சசிக்கலா ஆதரவு போஸ்டர் ஒட்டியதாக கோவை, திருச்சியை சேர்ந்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் சசிக்கலா மருத்துவமனையிலிருந்து விடுதலையான அன்று தேனி, ராமநாதபுரம் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் வேறு சில அதிமுக நிர்வாகிகள் சசிக்கலாவுக்கு ஆதரவு போஸ்டர் ஒட்டியிருந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ள அதிமுக தலைமை அவர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தொடர்ந்து இதுபோன்று ஆதரவு போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவது கட்சியை பலவீனமடைய செய்யும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. மேலும் இந்த சர்ச்சை குறித்து அதிமுக தலைமை நெறிமுறை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என அதிமுக வட்டாரத்தில் உள்ளவர்கள் எதிர்பார்க்கின்றனர்.