புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (11:18 IST)

தொடங்கிய தமிழக சட்டப்பேரவை; ஆளுனர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடப்பு ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகள் தொடங்க இருப்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் வகையில் இந்த கூட்டத்தொடர் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டத்தொடரின் தொடக்கமாக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை வாசிக்க தொடங்கும் முன்னரே திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. விருப்பம் இல்லாதவர்கள் வெளிநடப்பு செய்யலாம் என்று ஆளுனர் கூறிய நிலையில் ஆளுனர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது.